ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்திய கலிமந்தான் மாநிலத்தில் போர்னியோ தீவுப் பகுதயில் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க இந்தோனீசிய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வறட்சி் காலத்தில் கலிமந்தானில் காட்டுத் தீ வேகமாக பரவக்கூடும் என்பதால் அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இரு ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கலிமந்தான் மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் குண்டுகளைப் பயன்படுத்தி தீயை அணைப்பதில் அந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. மத்திய கலிமந்தானில் தீயணைப்பு நடவடிக்கையை தொடங்கிவிட்டோம் என்றும் மேலும் ஐந்து மாநிலத்தில் தீயணைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒரு குழுவினர் தயாராக இருப்பதாகவும் இந்தோனீசிய பேரிடர் நிவாரண அமைப்பின் தலைமைச் செயலாளர் டோடி ருஷ்வந்த் கூறினார்.
சுமத்ரா மற்றும் ஜாவாவில் காட்டுத் தீ பரவி வருவதாகக் கூறிய அவர், சுமத்ராவில் காட்டுத் தீ கட்டுக்குள் இருப்பதாகக் கூறினார். இந்தோனீசியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ பரவுவதால் அருகில் உள்ள நாடுகளும் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன.

