(காணொளி): பாலியில் கையும் களவுமாகப் பிடிபட்ட இந்திய குடும்பம்

பாலியிலுள்ள ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களைத் திருடிய இந்திய குடும்பம் பிடிபட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. டுவிட்டர் பயனீட்டாளர் ஹேமநாத் தமது பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்த அந்தக் காணொளி இதுவரை 317,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், ஹோட்டல் ஊழியர்கள் என நம்பப்படும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அந்தக் காணொளி காட்டியது.

ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர் குடும்பத்தினரின் பயணப் பெட்டியிலிருந்து ஹோட்டல் அறையின் சவர்க்காரம், துண்டுகள், கண்ணாடி, முடிகாயும் இயந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்ததைக் காணொளி காட்டியது.

“நான் இதுவரை பார்த்த மக்களில் இந்தோனீசியர்கள் மிக மென்மையானவர்களாகவும் கனிவானவர்களாகவும் உள்ளனர் என்று இந்தோனீசியாவில் வசித்து பாலிக்குச் சென்றுள்ள என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று திரு ஹேமநாத் தமது பதிவில் கூறியுள்ளார்.

இந்தியாவையும் இந்தியர்களையும் இவர்கள் பெரிதும் மதிப்பதால் இத்தகைய ஒரு சம்பவம் இந்தியர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். திரு ஹேமநாத்தின் கருத்துகளுக்குப் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியர்கள் அனைவரும் இப்படி இல்லை என்றும் சிலர் பதிவிட்டனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’. 37 மீட்டர் உயர செந்தோசா மெர்லயனைக் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 20ஆம் தேதியே கடைசி நாள். படங்கள்: செந்தோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

விடைபெறும் செந்தோசா மெர்லயன்

அங் மோ கியோவிலுள்ள புளோக் 224ல் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றம் செய்யப்படும் வேளையில் அது திடீரென தீப்பிழம்பாக வெடித்து அந்த வீட்டையே எரியச் செய்தது. (படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது