பாகிஸ்தானிய போர் விமான விபத்து: 17 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் ரிவால்பிண்டி நகரில் பாகிஸ்தானிய போர் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த விமானத்தில் இருந்த 5 பேரும் விழுந்து நொறுங்கிய இடத்தில் 12  பொதுமக்களும் விபத்தில் கொல்லப்பட்டனர். 

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஏற்பட்ட தீச்சமபவத்தில் மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.