பேங்காக்கில் வெடிப்புச் சம்பவங்கள் – குறைந்தது இருவர் காயம்

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் சிறிய அளவிலான சில வெடிப்புச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் குறைந்தது இருவர் இலேசாகக் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து வருவதாகத் தாய்லாந்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் ஒன்றை பேங்காக் ஏற்று நடத்திவருகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில்  பங்கேற்கின்றனர்.

<iframe src="https://albumizr.com/a/k5y0" scrolling="no" frameborder="0" allowfullscreen width="700" height="400"></iframe>

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பொங்கோலில் செப்டம்பர் 14ஆம் தேதியில் காணப்பட்ட புகைமூட்டம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

15 Sep 2019

புகைமூட்டம் மோசமடைந்தது