நிலவுக்குச் சென்ற இந்திய விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் படங்கள்

நிலவுக்குச் சென்ற இந்திய விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் படங்கள்

1 mins read
3a094533-0090-4a1a-b3fa-d478d3cb312d
-

இந்தியாவின் 'சந்திரயான்-2' விண்கலம், பூமியைக் காட்டும் சில படங்களைப் பதிவு செய்திருக்கிறது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் அந்தப் படங்களை இணையத்தில் நேற்று வெளியிட்டது. ஜூலை மாதம் 22ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட அந்த விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட ஐந்து படங்களை இணையவாசிகள் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்தப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கு இந்தியா அடுத்து நிலவில் எந்த அசம்பாவிதமுமின்றி தரையிறங்கும் நான்காவது நாடாகத் திகழும்.

கிட்டத்தட்ட 150 மில்லியன் வெள்ளி செலவில் செய்யப்படும் இந்தப் பயணத்தின்வழி சந்திர மேல்மட்டத்திலிருந்து தண்ணீர், கனிமப் பொருட்கள், கற்பாறை வடிவங்கள் ஆகிய தகவல்களைச் சேகரிக்க இஸ்ரோ முனைகிறது.