ஈசூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் செப்டெம்பர் 8ஆம் தேதி திறக்கப்படும்

ஈசூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் செப்டெம்பர் 8ஆம் தேதி திறக்கப்படும்

1 mins read
bfc746d1-2b5f-4640-9872-fc120e8f6fd0
யீசூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம். படம்: நிலப்போக்குவரத்து ஆணையம் -

ஈசூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் செப்டெம்பர் 8ஆம் தேதி திறக்கப்படும். சிங்கப்பூரின் 10ஆவது ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இது.

ஈசூனில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், தடையில்லா பயணிகள் இறங்குமிடம், மாதர்களுக்கான அறை, முதியோர்களுக்கு ஏதுவான கழிவறைகள் போன்ற வசதிகள் இடம்பெறும்.

இந்த மையத்திலிருந்து ஈசூன் எம்ஆர்டி நிலையத்திற்கும் நார்த்பாயிண்ட் சிட்டி பேரங்காடிக்கும் இணைப்புகளும் இருக்கும்.

இந்த மையத்தில் கிட்டத்தட்ட 600 மிதிவண்டிகள் நிறுத்தி வைப்பதற்கான வசதியும் இருக்கும்.

எஸ்எம்ஆர்டி பஸஸ் நிறுவனம் இந்த மையத்தை நிர்வகிக்கும். செட்மபர் 8ஆம் தேதிக்குப் பிறகு தற்போது ஈசூன் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் பேருந்துகளின் சேவைகள் புதிய மையத்திற்குச் செல்ல ஏதுவாக மாற்று அமைக்கப்படும்.