தேசிய தினம்: வாண வேடிக்கையைக் கண்டு ரசிப்பதற்கான சிறந்த இடங்கள்

தேசிய தினம்: வாண வேடிக்கையைக் கண்டு ரசிப்பதற்கான சிறந்த இடங்கள்

1 mins read
382cc304-37c8-4edb-bc8f-81dfa591f790
-

தேசிய தினத்தன்று வாண வேடிக்கைகளையும் நெருப்பு சாகசங்களையும் காண விரும்புவோர் அவற்றை மூன்று இடங்களில் கண்டு மகிழலாம். சிங்கப்பூர் ஆற்றின் கரையோரம், மரீனா பே, பாடாங் திடல் ஆகியவை அந்த மூன்று இடங்கள்.

நாளை பிற்பகல் 2 மணி வாக்கில் புகைப்பட ஆர்வலர்கள் இந்த இடங்களில் குவியத் தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஆறு நிமிடங்களுக்கு நீடிக்கும் அந்த வாணவேடிக்கைகளைக் காண்பதற்காகவும் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்காகவும் இந்த இடங்கள் சிறந்தவை என்பது புகைப்படக் கலைஞர்கள் பலரின் கருத்து.

தேசிய தின அணிவகுப்பைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மரினா பே, சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம், தேசிய அரும்பொருளகம், 'அவர் தெம்பனிஸ் ஹப்' மையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய திரைகளில் கண்டு மகிழலாம்.

அணிவகுப்பு நாளை மாலை 5.30 மணிக்குத் தொடங்கும்.