பாடாங்குக்கு திரும்பும் அணிவகுப்பு

இன்று தேசிய தினத்தை முன்னிட்டு பாடாங்கில் நடைபெறும் மாபெரும் அணிவகுப்புக்குப் பிறகு வானில் ஒளிவெள்ளத்தைக் கக்கவிருக்கும் வாணவேடிக்கையைக் காணவும் அவற்றை காணொளியாகவும் புகைப்படங்களாகவும் தங்கள் தொழில்நுட்பக் கருவிகளில் கவ்விக்கொள்ள பொதுமக்கள் ஆவலுடன் இருப்பார்கள் என்பது திண்ணம். அதற்கான சிறந்த இடங்கள்.

1. போட் கீ: ஆசிய நாகரிக அரும்பொருளகத்துக்கு எதிர்ப்புறத்தில் உள்ள சிங்கப்பூர் ஆற்றிலிருந்து முதல் முறையாக விடப்படும் வாணவேடிக்கைகளை பொதுமக்கள் காணலாம். அதன் அருகில் உள்ள எம்ஆர்டி நிலையங்கள்: கிளார்க் கீ, ராஃபிள்ஸ் பிளேஸ்.

2. மெர்லயன் பூங்கா: இந்த இடத்துக்கு நடந்தே செல்லலாம். அதன் அருகில் உள்ள எம்ஆர்டி நிலையம்: ராஃபிள்ஸ் பிளேஸ்.

3. ஹீலிக்ஸ் பாலம்: உங்கள் வாகனத்தைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்து மூலம் முன்கூட்டியே சென்று விடுங்கள். பாடாங், மரினா பே மிதக்கும் மேடை ஆகியவற்றைச் சுற்றியுள்ள சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும். அதன் அருகில் உள்ள எம்ஆர்டி நிலையம்: பேஃபிரண்ட்

4. த புரோமொண்டரி@மரினா பே: இந்த இடத்துக்கு வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே சென்று மத்திய வர்த்தக வட்டாரத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்துங்கள். அதன் அருகில் உள்ள எம்ஆர்டி நிலையங்கள்: பேஃபிரண்ட், டௌன்டவுன்.

பாடாங்கைத் தவிர அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பு

தேசிய தின அணிவகுப்பைக் காண அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள், மரினா அணைக்கட்டு, சாங்கி விமான நிலையம் மூன்றாவது முனையம், தேசிய அரும் பொருளகம், 'அவர் தெம்பனிஸ் ஹப்' ஆகிய இடங்களில் உள்ள பெரிய திரைகளில் அதை கண்டு மகிழலாம். அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பு இன்று மாலை 5.45 மணிக்குத் தொடங்கும்.

இன்றைய பற்றுறுதிச் சடங்குகள்

இன்று மேலும் பல இடங்களில் தேசிய தினப் பற்றுறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இயூ டீ, லிம்பாங் தொகுதிகளில் சுமார் 4,000 குடியிருப்பாளர்கள் இன்று காலை 7 மணிக்கு பாங் சுவா கால்வாயைக் கடந்து மெதுநடை புரிந்து கேன் சிட்டி கடைத்தொகுதியில் கொண்டாட் டத்தில் பங்கேற்பார்கள்.

அதேபோல், ஃபேரர் பார்க் திடலில் நடைபெறும் கேளிக்கை விழாவில் முன்னாள் தேசிய காற்பந்து நட்சத்திரங்களான ரசாலி சாட், நோர் அலாம் ஷா கலந்து கொள்வார்கள். அங்கு குதிரைச் சவாரியிலும் மக்கள் பங்கேற்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!