சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட “யூடியூபர்” ப்ரீத்திக்கும் சகோதரருக்கும் நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை

உள்ளூர் “யூடியூபர்” ப்ரீத்தி நாயர் (Preetipls), அவரது சகோதரர் சுபாஸ் நாயர் இருவரும் இணையத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய “ரெப்” காணொளியின் தொடர்பில் போலிசார் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுத்தனர். 

இதுபற்றி புதன்கிழமை அறிக்கை வெளியிட்ட போலிசார், காணொளி தொடர்பான விசாரணையை முடித்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இந்த விவகாரத்தின் சூழ்நிலைகளைப் பரிசீலித்து, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, உடன்பிறப்புகளுக்கு 24 மாதகால நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். 

சர்ச்சைக்குரிய காணொளி ஜூலை 29ஆம் தேதி ஃபேஸ்புக்கிலும் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டது. அதே நாளன்று, காணொளி பற்றி போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது. 

பிற்பாடு, அந்தக் காணொளியைத் தயாரித்து வெளியிட்டதாக ப்ரீத்தியும் அவரது சகோதரரும் போலிசாரிடம் ஒப்புக்கொண்டனர். 

“இந்தக் காணொளி குற்றவியல் தண்டனை சட்டத்தைத் தெளிவாக மீறியிருந்தது,” என போலிசாரின் அறிக்கை குறிப்பிட்டது.

“இந்தக் காணொளி அனுமதிக்கப்பட்டால், எல்லா சமூகங்களையும் குறிவைக்கும் இதுபோன்ற மற்ற அவதூறான காணொளிகளையும் அனுமதிக்க வேண்டியிருக்கும்,” என அறிக்கை கூறியது. 

இதுபோன்ற செயல்களால் இனவாதமும், இனப்பூசலும் மோசமடைந்து, முடிவில் வன்செயலும் வெடிக்கக்கூடும் என கடந்த வாரம் உட்பட அண்மைக் காலமாக உலகெங்கிலும் நடந்துவரும் நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுவதாகவும் போலிசார் கூறினர். 

“இத்தகைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக மலாய் மற்றும் இந்திய சமூகங்கள், அதிகமாகப் பாதிக்கப்படக்கூடும்.

“இனத்தையும் சமயத்தையும் குறிவைக்கும் எந்தவித அவதூறான பேச்சையும் அனுமதிக்காத தெளிவான அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது,” என போலிசார் குறிப்பிட்டனர். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்

N-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும்  நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

05 Dec 2019

புற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு