வெள்ளத்தால் இந்தியாவில் குறைந்தது 244 பேர் பலி

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை குறைந்தது 244 பேர் உயிர் இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் வரும் பருவ மழைக்காலத்தினால் ஏற்படும் மரணங்கள் தேசிய அளவில் இவ்வாண்டு குறைந்தபட்சம் 244-ஐ எட்டியுள்ளது. இச்சூழ்நிலையில்  கேரளாவின்  தென்  பகுதிகளில்  வெள்ளம் ஏற்படும் என்று புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 லிருந்து 48 மணி நேரத்திற்குள் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கேரளா உட்பட கர்நாடகா, மஹராஷ்ட்ரா, குஜராத் ஆகிய நான்கு இடங்களில் கனத்த  மழைப் பெய்துள்ளதால் அங்கு வசிக்கும் 1.2 மில்லியனுக்கு மேலான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசாங்கம் அமைத்துள்ள உதவி முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்ற ஆண்டின் மிக மோசமான மழை தாக்குதலால் ஏற்பட்ட பொது கட்டமைப்பு, சாலை, ரயில் பாதை சேதங்களிலிருந்தும் உயிரிழப்புகளிலிருந்தும் கேரளா இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது குறிப்படத்தக்கது.

சென்ற ஆண்டின் கடுமையான வெள்ளதால் சுமார் 450 அங்கு உயிரிழந்துள்ளனர்.

இம்முறை வந்துள்ள பருவ மழையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 95ஆக உயர்ந்துள்ளன என்றும்  59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேரளாவின் காவல் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

ஆதற்கு பக்கத்தில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடுமையான வெள்ளத்தால் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 677,000 பேரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

குஜராத், மஹராஷ்டாவின் மேற்கு மாநிலங்களில் 66 உரியிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததுடன் நூற்றுக்கனக்கான ஆயிர மக்கள் காப்பாற்றப்பட்டது குறித்தும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

தேடல், மீட்பு, உதவி பணிகளில் உள்ளூர் அவசர காலப் பிரிவுடன்  இராணுவப் படை, ஆகாயப்படை, கடற்படை ஆகியவற்றை இணைந்து ஈடுபட இந்தியா ஏற்பாட்டு செய்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்

N-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும்  நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

05 Dec 2019

புற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு