துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது

துடுப்புப் படகு விபத்தில் எண்டாவ் கடற்பகுதியில் காணாமல் போன இரு சிங்கப்பூரர்களில் ஒருவரான திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது.
ஃபேஸ்புக் பக்கத்தில் தமது தாயாரை பற்றி பகிர்ந்துகொண்ட 24 வயது திரு லூவிஸ் பாங் திருமதி புவா சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

“இப்போது நீங்கள் சுதந்திரமாக சிறகை விரித்து பறக்கலாம். உங்களை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறுதியளிக்கிறேன்,” என்று குறிப்பிட்ட அவரது ஃபேஸ்புக் பதிவேற்றத்தில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் திரெங்கானு அருகே உயிர் காப்பு உடை அணிதிருந்த அந்த மாதின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதை  மலேசிய அதிகாரிகள் நேற்று முன் தினம் உறுதிப்படுத்தினர். ஆனால், அந்த உடல் யாருடையது என்பதை அவர்கள் அப்போது அடையாளம் காணவில்லை.

அந்த உடல், மெர்சிங்கின் எண்டாவ் கடற்பகுதியில் காணாமல் போன இரண்டு சிங்கப்பூர் துடுப்பு (கயாக்) படகோட்டிகளில் ஒருவரான திருவாட்டி புவா ஜியோக் டின், 57, என்பவருடையதா என்று உறுதிப்படுத்த அதிகாரிகள் அந்த மாதின் உறவினர்களை நேற்று அணுகியதை அடுத்து அவரது சடலம் தமது மகனால்  இன்று அடையாளம் காணப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். படங்கள்: ஷின் மின் நாளிதழ், பேங்காக் போஸ்ட்

13 Dec 2019

தாய்லாந்து விடுதியில் எரிவாயு கசிவு: நினைவிழந்த நிலையில் கிடந்த சிங்கப்பூர் குடும்பம்

இவ்வாண்டின் 11 மாதங்களில் 48 சம்பவங்களில் பாதி உள்ளிருந்து வெளியே தள்ளித் திறக்கப்படும் சன்னல்கள் தொடர்பானவை என்று தெரிவித்த இவ்விரு அமைப்புகள், இதற்கு முக்கிய காரணம் அவற்றின் துருபிடித்த ஆணிகளே என்பதையும் சுட்டின. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

பராமரிப்பு குறைபாட்டால் சன்னல் விழுந்தால் வீட்டு உரிமையாளருக்கு சிறை

காசோலைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது பற்றியும் இந்த இந்த மோசடி பற்றியும் நாதனுக்கு எதுவும் தெரியாது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடியில் உதவிய மலேசிய இந்தியருக்கு 39 மாத சிறை