துவாஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் பெரும் போக்குவரத்து நெரிசல்

துவாஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் பெரும் போக்குவரத்து நெரிசல்

1 mins read
6368b78d-0c5b-41f3-814f-a6969329de12
இரு வழிகளிலும் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் காட்டும் காட்சி. படம்: ONEMOTORING.COM.SG -

துவாஸ்ஸில் உள்ள குடிநுழைவு மின்னியல் கட்டமைப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால் இன்று காலை (ஆகஸ்ட் 29) துவாஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

துவாஸ்ஸில் உள்ள குடிநுழைவு மின்னியல் கட்டமைப்புத் திட்டம்அவ்வப்போது தாமதமாகச் செயல்படுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிங்க்கப்பூரிலிருந்து வெளியேறும், உள்ளே நுழையும் இரு வழிகளிலும் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்ற சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையம் இன்று காலை 7.45 மணியளவில் தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தது.

இரு வழிகளிலும் வாகனங்களின் நீண்ட வரிசையைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பதிவேற்றப்பட்டு வருகின்றன. சிலர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நெரிசலில் மாட்டிக்கொண்டதாகவும் சிலர் தாங்கள் கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றும் தங்கள் சமூக வலைப் பக்கங்களில் பதிவிட்டனர்.