படகு தீப்பிடித்து எரிந்து 25 பேர் மரணம்

படகு தீப்பிடித்து எரிந்து 25 பேர் மரணம்

1 mins read
c51d38c7-5b28-44a8-b55b-2e489d2af98b
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் படகு ஒன்று தீக்கிரையானதில் குறைந்தது 25 பேர் மாண்டு போயினர்; மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை. 'கான்செப்ஷன்' என்ற அந்த முக்குளிப்பாளர்கள் படகு, சாந்த குரூஸ் தீவை ஒட்டிய கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டு இருந்தது. அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் அப்படகில் இருந்து உதவிகோரி அழைப்பு வந்ததாக கடலோரக் காவல் படை தெரிவித்தது. படகின் மேல் தளத்தில் உறங்கிக்கொண்டிருந்த அதன் ஊழியர்கள் ஐவரும் கடலில் குதித்துத் தப்பிவிட்டனர். கீழ்த்தளத்தில் உறங்கிய பயணிகள் மாட்டிக் கொண்டனர். தீக்கிரையான படகு, நீருக்குள் மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்