ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் முகாபே காலமானார்

ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர்  ராபர்ட் முகாபே தமது 95ஆவது வயதில் காலமானார். அவருக்கு 95 வயது. திரு முகாபே சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் உயிர்நீத்ததாக நம்பப்படுகிறது.

“ஸிம்பாப்வேயை நிறுவியவரும் முன்னாள் அதிபருமாக இருந்த ராபர்ட் முகாபேயின் மரணத்தை வருத்தத்துடன் நான் அறிவிக்கிறேன்,” என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எமர்சன் நன்காக்வா டுவிட்டரில் பதிவு செய்தார்.

“விடுதலையின் சின்னமாகத் திகழ்ந்த தோழர் முகாபே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒற்றுமையை விரும்புபவர். மக்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். நம் நாட்டின் வரலாற்றுக்கும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கும் அவர் ஆற்றிய பங்கு மறக்கப்படமாட்டாது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்,” என்றார் திரு நன்காக்வா.