பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஒரு வார விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கத் தயாராகியுள்ளது. ஆயினும், சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் புகைமூட்ட நிர்வாக முறைகளை தேவைக்கேற்ப செயல்படுத்தவும் தயாராக இருப்பதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை அதிமுக்கியமாகக் கருதுவதாகக் கூறிய கல்வியமைச்சு, பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் சிறப்புத் தேவை பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஏற்கெனவே நுரையீரல் அல்லது இதய பிரச்சினைகளைக் கொண்ட மாணவர்களையும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பர் என்று அமைச்சு கூறியது.

சிங்கப்பூரின் காற்றுத்தரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சற்று மேம்பட்டு வந்தது. தீவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழைத் தூறலுக்கு இடையே பிஎஸ்ஐ குறியீடு சற்று குறைந்துள்ளது.

24 மணி நேரத்திற்கான குறியீட்டின் அளவு, மாலை 5 மணியளவில் சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் 100க்கும் தெற்குப் பகுதியில் 108க்கும் இடையே இருந்தது. இது, காலையில் கிழக்குப் பகுதியில் 107க்கும் மேற்குப் பகுதியில் 124க்கும் இடையே பதிவான குறியீட்டின் அளவைக் காட்டிலும் குறைவு.

தீவெங்கிலுமுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்ஐ குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

101க்கும் 200க்கும் இடைப்பட்ட குறியீடு ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

பிஎஸ்ஐ குறியீட்டைப் பொறுத்தமட்டில் சிறிதளவு முன்னேற்றம் தென்பட்டாலும் புகையின் அடர்த்தியைக் கணிக்கும் ‘பிஎம் 2.5’ என்ற அளவீட்டில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

 காலை எட்டு மணி அளவில் கிழக்குப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 26 மைக்ரோகிராமுக்கும் மத்தியப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 37 மைக்ரோகிராமுக்கும் இடைப்பட்டிருந்தது. இதுவே மாலை ஐந்து மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கான  ‘பிஎம் 2.5’ அளவீடு தீவின் மத்தியப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 49 மைக்ரோகிராமுக்கும் மேற்குப் பகுதியில் ஒரு கனசதுர மீட்டருக்கு 63 மைக்ரோகிராமுக்கும் இடைப்பட்டுள்ள அளவுக்குக் குறைந்தது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்

N-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும்  நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

05 Dec 2019

புற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு