தொடரும் புகைமூட்டம்: 90,000 மலேசிய மாணவர்கள் பாதிப்பு

ஜோகூர் பாருவில் காற்றுத்தூய்மைக் கேடு மேலும் மோசமாகியுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்ட பள்ளிகளும் பாலர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் கிட்டத் தட்ட 90,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றுத்தரக் குறியீடு 200ஐ தாண்டினால் அனைத்து பள்ளிகளும் உடனடியாக மூடப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சு கூறியிருந்தது.

நேற்று நண்பகல் வரை கிடைத்த தகவலின்படி தங்காக்கும் மலாக்கா வும் மிக மோசமான காற்றுத் தூய்மைக்கேடுள்ள இடங்கள் என்பது தெரிய வந்துள்ளது. தங்காக்கில் காற்றுத் தரக் குறியீடு 254 என்றும் மலாக்காவில் 222 என்றும் பதிவாகியிருந்தன.

இதற்கிடையே சிலாங்கூரிலும் நாட்டின் சில பகுதிகளிலும் செயற்கை மழை பொழிய வைப்பது இன்று நடவடிக்கை எடுக்கப்படு கிறது. நேற்று இதை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாலும் பருவநிலையும் மேகமூட்டமும் மிதமாக இருந்ததால் இது இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இது புகை மூட்டப் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று அந்நாட்டின் எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத் துறை துணை அமைச்சர் இஸ்னாரைசா முனிரா மாஜிலிஸ் கூறினார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு வாரப் பள்ளி விடுமுறை முடிந்து சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கின்றன. காற்றுத் தூய்மைக் கேட்டைச் சமாளிக்க முறையான நட வடிக்கைகள் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் அவை செயல்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு நேற்று கூறியது.

காற்றுத்தரம் நேற்று பிற்பகலில் சற்று மேம்பட்டு வந்தது. தீவின் பல்வேறு பகுதிகளில் பெய்த லேசான மழையிடையே பிஎஸ்ஐ என்னும் காற்றுத் தரக் குறியீடு சற்று குறைந்துள்ளது.

24 மணி நேரத்திற்கான குறியீட்டின் அளவு, நேற்றிரவு ஒன்பது மணியளவில் 91க்கும் 100க்கும் இடைப்பட்டிருந்தது. 101க்கும் 200க்கும் இடைப்பட்ட குறியீடு ஆரோக்கிய மற்றதாக வகைப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தேசிய சுற்றுப்புற வாரியம் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே இங்குள்ள பல கடைகளில் முகக் கவசங்கள் விற்றுத் தீர்ந்ததாகவும் விரைவில் இருப்பு வந்துவிடும் என்றும் சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!