பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு வழங்கியது தொடர்பில் 34 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் அகமது ஹுசேன் அப்துல் காதர் ஷெய்க் உதுமான் மொத்தம் 1,145 வெள்ளி பெறுமானமுள்ள இரண்டு தொகைகளை வெளிநாட்டில் இருக்கும் “பயங்கரவாதம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தனிநபர் ஒருவருக்குப் பணம் அளித்ததாக உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

கொடுக்கப்பட்ட தொகையின் அளவு என்னவாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்காகப் பணம் அளிப்பது சட்டப்படி குற்றமாகும்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஹுசேன் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார்.