ஏழாவது நாளாக புகைமூட்ட பிரச்சினை

காற்றுத் தரம் அவ்வப்போது சுகாதாரமற்ற நிலையில் இருந்துவர, புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள பள்ளிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் வகுப்பறைகளிலும் பள்ளி மண்டபத்திலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக நேற்று கல்வி அமைச்சு கூறியது.

இவ்விடங்களில் காற்றுச் சுத்திகரிப்புச் சாதனங்களைப் பயன்படுத்துவது அதில் ஒன்றாகும்.

காற்றுத் தரம் மிகவும் சுகாதாரமற்ற நிலையை எட்டினால் இச்சாதனங்கள் இயக்கப்படும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விவரித்தது.

இத்துடன் ஏற்கெனவே நுரையீரல், இருதய பாதிப்புகள் கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்து வரவேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்திக் கூறியுள்ளது.

தேசிய தேர்வுகளின்போது புகைமூட்டத்தால் மாணவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் அச்சூழலுக்கும் முன்னேற்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை ஒத்தி வைப்பது குறித்துச் சில பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், காற்றுத் தரம் மிகவும் சுகாதாரமற்ற அளவான 200லிருந்து 300க்குள் இருந்தால் பள்ளிகள் மூடப்படும் என்றும் அப்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அமைச்சு பதிலளித்துள்ளது.

நாட்டின் நிறுவனங்களும் அதன் ஊழியர்களுக்குத் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக வெளிப்புறத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

நிறுவனங்கள் ‘N95’ முகக்கவசங்களை ஊழியர்களுக்குக் கொடுத்து வருவதுடன் புகைமூட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளையும் அவர்களுக்கு அளித்து வருகின்றன.

இதற்கிடையே மலேசியாவின் சரவாக்கில் உள்ள ஆறு பகுதிகளில் தொடர்ச்சியாக மிகவும் சுகாதாரமற்ற காற்றுத் தரக் குறியீடு பதிவாகி வருகிறது.

பெரும்பாலான பகுதிகளில் குறியீடு 200க்கும் மேலாகவே இருந்தது.

மோசமடைந்து வரும் புகைமூட்டத்தின் காரணத்தால் மலேசியாவில் கிட்டத்தட்ட 2,459 பள்ளிகள் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன.

இதனால் 1,732,842 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

சரவாக்கில் உள்ள மாணவர்களுக்கு அரசு 500,000 முகக் கவசங்களைத் தந்துள்ளதாகவும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் பல பகுதிகளில் 1,500000 முகக் கவசங்கள்

தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் வகுப்புகளைத் தொடர்வது குறித்து முடிவெடுக்க உயர்கல்வி நிலையங்களின் நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு 200க்குள் பதிவாகியிருந்ததால் நெகிரி செம்பிளானிலும் பேராக்கிலும் உள்ள பள்ளிகள் இன்று திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!