விடைபெறும் செந்தோசா மெர்லயன்

சுற்றுலாத் தலமான செந்தோசா தீவின் மையமாக விளங்கும் 37 மீட்டர் உயர மெர்லயன் இந்த ஆண்டு இறுதிக்குள் இடிக்கப்பட இருக்கிறது. செந்தோசா தீவின் வடக்கு, தெற்கு கரையோரப் பகுதிகளை இணைக்கும், புதிய கண்கவர் இணைப்புவழிக்காக அந்த முக்கிய சின்னம் வழிவிடுகிறது.

செந்தோசா தீவையும் அதையொட்டிய புலாவ் பிரானி தீவையும் முதன்மையான பொழுதுபோக்கு, சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பான செந்தோசா-பிரானி பெருந்திட்டம் பற்றி இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் அறிவித்திருந்தார்.

அந்தப் பெருந்திட்டம் குறித்த விவரங்களை செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, $90 மில்லியன் மதிப்பிலான ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’ திட்டத்தின்கீழ், கிட்டத்தட்ட ஐந்தரை காற்பந்துத் திடல் அளவுக்கு, அதாவது 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஈரடுக்கு இணைப்பு வழி அமையவுள்ளது. ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவையும் தெற்கிலுள்ள கடற்கரைப் பகுதிகளையும் இணைக்கும் இவ்வழிக்கான பணிகள் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் தொடங்கி, 2022ஆம் ஆண்டில் நிறைவுபெறும்.

செந்தோசா-பிரானி பெருந்திட்டத்தின்படி, அந்த இரு தீவுகளும் ‘வைப்ரன்ட் கிளஸ்டர்’, ‘ஐலண்ட் ஹார்ட்’, ‘வாட்டர்ஃபிரண்ட்’, ‘ரிஞ்ச்லைன்’, ‘பீச்ஃபிரண்ட்’ என ஐந்து வட்டாரங்களாகப் பிரிக்கப்படும்.

அவை ஒவ்வொன்றும் தனித்த சிறப்பம்சங்களைக் கொண்டு, பார்வையாளர்களுக்குப் பிரத்தியேகமான அனுபவங்களை அளிக்கும் எனக் கூறப்பட்டது.

போக்குவரத்துத் தொடர்பும் மேம்படுத்தப்படும். பாசிர் ரிஸ்ஸில் உள்ள டௌன்டவுன் ஈஸ்ட்டைப் போல புலாவ் பிரானியில் ‘டௌன் டவுன் சவுத்’ கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலாவ் பிரானியில் அமைந்துள்ள துறைமுக முனையம், 2027ஆம் ஆண்டிற்குள் துவாசிற்கு இடம் மாறும். அதே நேரத்தில், அங்குள்ள போலிஸ் கடலோரக் காவல்படையின் தலைமையகம் அங்கேயே இருக்கும்.

வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் பொழுதுபோக்கவும் உகந்த இடமாக 30 கி.மீ. நீளத்திற்கு அமையவிருக்கும் ‘தென் நீர்முகப்பு’ வட்டாரத்திற்குள் இந்த இரு தீவுகளும் வரும்.

1995ஆம் ஆண்டு கட்டப்பட்ட செந்தோசா மெர்லயனை வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை பார்வையாளர்கள் காண முடியும். அதற்கான அனுமதிக் கட்டணம் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசி களுக்கும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அனுமதி இலவசம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!