மணிலா: படத்தைப் பார்த்ததும் பத்து அல்லது பன்னிரண்டு வயது மாணவன் அல்லது மாணவி என்றுதான் கூறமுடியும். ஆனால் இந்த பிலிப்பினோ ஆடவரின் வயதோ 23. அத்துடன் இவர் ஓர் ஆசிரியர்.
இயன் ஃபிரான்ஸிஸ் மங்கா என்னும் பெயருடைய இவர் பிலிப்பீன்ஸின் புலகான் மாநிலத்தில் உள்ள பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கும் தொடக்கநிலை 3ன் மாணவர்களுக்கும் பாடம் நடத்தி வருகிறார். இவருடைய தோற்றமும் சிறுபிள்ளைக்குரிய குரலும் இவரும் ஒரு மாணவர் என்று பலராலும் பல சந்தர்ப்பங்களிலும் தவறாகக் கருதப்பட்டுள்ளதாக ஜிஎம்ஏ நியூஸ் தெரிவிக்கிறது.
162 அடி உயரத்தில் கிடுகிடுவென வளர்ந்திருந்தாலும் திடீரென்ற இவரைப் பார்ப்போர் குட்டிப் பையன் என்றே அழைக்கிறார்களாம்.
வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க தோற்றம் ஒரு தடையல்ல என்னும் கருத்துடன் அண்மையில் வெளியிடப்பட்ட காணொளி யூடியூப்பில் நான்கு மில்லியன் தடவையும் ஃபேஸ்புக்கில் 1.4 மில்லியன் தடவையும் பார்க்கப்பட்டுள்ளது.

