பிரதமர் லீ சியன் லூங்: சிங்கப்பூர்-ஆர்மினியா உறவு 200 ஆண்டுகள் பழமையானது

சிங்கப்பூருக்கும் ஆர்மினியாவுக்கும் இடையிலான உறவு 200 ஆண்டுகள் பழமையானது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

ஆர்மினியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு லீ, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்நாட்டின் பிரதமர் நிகோல் பஷின்யானைச் சந்தித்தார்.

பின்னர் மதிய விருந்து நிகழ்ச்சியில் பேசிய திரு லீ, சிங்கப்பூர்-ஆர்மினிய உறவு, இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் துறைமுகத்தை கண்டுபிடித்த சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்சின் காலத்துக்கு இட்டுச் செல்லும் என்றார்.

சிங்கப்பூரின் ஆகப் பழமையான சமூகங்களில் ஆர்மினிய சமூகமும் ஒன்று என்ற பிரதமர், சிங்கப்பூரில் அவர்கள் விட்டுச் சென்ற அடையாளம் இன்றும் நீங்காமல் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

உதாரணமாக, சிங்கப்பூரின் பிரதான ஆங்கில ஊடகமான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழை 1845ல் நிறுவியவர்களில் ஆர்மினியாவைச் சேர்ந்த கேட்சிக் மோசசும் ஒருவர்.

சிங்கப்பூரின் ஆகப் பழமையான தேவாலயங்களில் ஆர்மினிய தேவாலயமும் ஒன்று.

“ஆர்மினியர்கள் மிக வலுவாக இல்லாத காலகட்டத்தில் 184 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது.

“உங்களுடைய 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் ஆகப் பழமையான கத்தோலிக்க தேவாலயத்தையும் இந்தப் பயணத்தில் சுற்றிப் பாக்க விரும்புகிறேன்,” என்று பிரதமர் சொன்னார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தம்முடைய தந்தை லீ குவான் இயூ மதியுரை அமைச்சராக இருந்தபோது ஆர்மினியா தலைநகர் யேரவனுக்குச் சென்றதையும் பிரதமர் லீ நினைவுகூர்ந்தார்.

“உங்களுடைய அழகிய நாட்டின் அபரிமிதமான வளங்களைப் பற்றி என்னுடைய தந்தை என்னிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு நீங்கள் அளித்த விருந்தோம்பலையும் அவர் பாராட்டினார்.

அவரது அந்தப் பயணம் சிங்கப்பூர்-ஆர்மினிய உறவில் புதிய மைல்கல்லாக அமைந்தது,” என்றார் திரு லீ.

ஆர்மினியாவில் நன்கு கல்வியறிவு பெற்ற ஊழியர் அணி இருப்பதையும் உலகெங்கும் உள்ள தலைச்சிறந்த பல்கலைக் கழகங்களிலும் நிறுவனங்களிலும் ஆர்மினியர்கள் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டி பிரதமர் பாராட்டினார். புத்தாக்கத்தில் ஆர்மினிய மக்களின் கடப்பாட்டையும் அவர் எடுத்துரைத்தார்.

சுகாதாரப் பராமரிப்பு சேவையின் தோற்றத்தையே மாற்றியமைத்த ‘எம்ஆர்ஐ’ சாதனத்தின் கண்டு பிடிப்பு, உலகில் எங்கும் நிறைந்துள்ள ஏடிஎம் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு ஆகியவற்றை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

மேலோட்டமாகப் பார்த்தால் சிங்கப்பூரும் ஆர்மினியாவும் வேறுபட்டிருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருப்ப தாகவும் அவர் கூறினார்.

இரு நாடுகளும் சிறிய நாடுகளாக இருந்தாலும் தங்களுடைய வட்டாரத்தின் வாயிலாக செயல்பட விரும்புவதை அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சிறந்த உறவை சுட்டிக்காட்டிய ஆர்மினிய பிரதமர் நிகோல் பஷின்யான், ஜூலையில் சிங்கப்பூருக்கு வந்தபோது சிங்கப் பூரில் ஆர்மினிய பாரம்பரியம் கட்டிக் காக்கப் படுவதை அறிந்து மனம் நெகிழ்ந்ததாகத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!