திருச்சி நகைக்கடையில் திருட்டு; மணிகண்டன் கைது

திருச்சி நகைக்கடையில் திருட்டு; மணிகண்டன் கைது

1 mins read
b6c149cb-825f-4b17-bd40-cef6a21e2f6b
-

திருச்சியிலுள்ள நகைக்கடையைக் கொள்ளையடித்ததன் பேரில் தமிழக போலிசார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். திருவாரூரில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட மணிகண்டன் என்பவரிடம் அதிகாரிகள் ஐந்து கிலோகிராம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 130 மில்லியன் ரூபாய் மதிப்பிலான 30 கிலோகிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதிகாலை 2 மணி வாக்கில் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டு கொள்ளைக்காரர்கள் ஆபரணங்களை அள்ளிச் சென்றனர். விலங்கு முகமூடிகளை அணிந்திருந்த இருவர் நகைகளை எடுத்துச் சென்றது கடையிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

கொள்ளைக்காரர்களைக் கண்டுபிடிக்க ஏழு தனிப்படைகளை போலிசார் அமைத்ததாகத் தகவல் வெளிவந்தது. பிடிபட்ட மணிகண்டனை விசாரிக்கும் அதே வேளையில் சீராத்தோப்பு சுரேஷ் என்பரை அதிகாரிகள் மும்முரமாகத் தேடி வருகின்றனர். சுரேஷின் குடும்பத்தாரை போலிசார் தற்போது விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.