ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள ஒரு காப்பிக் கடையில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31லுள்ள புளோக் 346ல் உள்ள காப்பிக்கடையில் தீச்சம்பவம் நிகழ்ந்ததாக இன்று காலை 8 மணி வாக்கில் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவத்தின்போது காப்பிடக கடைக்குள் இருந்த மூன்று பேர் குடிமைத் தற்காப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டனர். ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட வட்டாரவாசிகளுக்கு அடித்தள அமைப்புகள் தேவையான உதவியை கொடுக்கும் என்றும் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு உதவி செய்ய அமைப்புகள் பணியாற்றும் என்றும் யூஹுவா வட்டாரத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் பூ ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

