இனங்களுக்கு இடையிலான வருமான இடைவெளியைக் குறைக்க மலேசியா திட்டம்

இனங்களுக்கு இடையிலான வருமான இடைவெளியைக் குறைக்க மலேசியா திட்டம்

2 mins read
a0129a2c-b657-4f85-8574-53c062aeb4ac
-

மலேசிய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள செல்வச்செழிப்பு பகிர்வு 2030 தொலைநோக்குத் திட்டத்தில் பெரும்பான்மை பூமிபுத்ராக்களின் வருவாயை உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் மகாதீர் முகம்மது இன்று தொடங்கிவைத்தார். மலாய் முஸ்லிம்களைப்

பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தின் செல்வ பகிர்வு அண்மைய ஆண்டுகளாகக் குறைந்து வந்துள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். 2030ஆம் ஆண்டுக்குள் பல இனத்தவர்களுக்கு இடையிலான வருமான இடைவெளியை 10 விழுக்காட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. "பூமிபுத்ராக்கள் அல்லது இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் உள்ள இடைவெளி கடந்த 27 ஆண்டுகளில் 3.5 மடங்கிற்கும் 4 மடங்கிற்கும் இடைப்பட்டதாக விரி வடைந்துள்ளது," என அந்தந்த இனத்தவரின் இடைநிலை குடும்ப வருமானத்தைக் குறிப்பிட்டு டாக்டர் மகாதீர் கூறினார்.

2011 முதல் 2015 வரை நஜிப் ரசாக் ஆட்சி நடைபெற்றபோது பூமிபுத்ராக்களின் நிறுவனப் பங்குகள் 23.4 விழுக்காட்டிலிருந்து 16.2 விழுக்காட்டுக்குக் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் வெளிநாட்டவர் நிறுவனங்களின் நிதி மதிப்பீடு 37.2 விழுக்காட்டிலிருந்து 45.3 விழுக்காட்டுக்கு உயர்ந்துவிட்டதாகச் சொன்னார். புதிய பொருளியல் கொள்கையில் பூமிபுத்ராக்களின் பங்கு 30% என்று வகுக்கப்பட்ட மலேசிய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள செல்வச்செழிப்பு பகிர்வு 2030 தொலைநோக்குத் திட்டத்தில் பெரும்பான்மை பூமிபுத்ராக்களின் வருவாயை உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் மகாதீர் முகம்மது இன்று தொடங்கிவைத்தார். மலாய் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தின் செல்வ பகிர்வு அண்மைய ஆண்டுகளாகக் குறைந்து வந்துள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். 2030ஆம் ஆண்டுக்குள் பல இனத்தவர்களுக்கு இடையிலான வருமான இடைவெளியை 10 விழுக்காட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.