விமானப் போக்குவரத்து புத்தாக்கப் போட்டி: வாகை சூடிய சிங்கப்பூர் மாணவர்கள்

விமானப் போக்குவரத்து புத்தாக்கப் போட்டி: வாகை சூடிய சிங்கப்பூர் மாணவர்கள்

1 mins read
6008aa81-39f6-46c5-937a-ae89a0397e48
-

அனைத்துலக சிவில் விமானப் போக்குரவத்து அமைப்பின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இளையர்களை மையமாகக்கொண்டு விமானப் போக்குவரத்து புத்தாக்கப் போட்டி நடத்தப்பட்டது.

புதிய வகை விமானங்கள் அல்லது விமானத்தை இயக்கும் புதிய முறைகள் ஆகியவை குறித்து மாணவர்கள் சமர்ப்பித்தனர். போட்டியின் இரண்டு பிரிவுகளிலும் சிங்கப்பூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர். ஐடிஇ சென்ட்ரல் வளாகத்தின் விமானப் போக்குவரத்து நிலையத்துக்கு நேற்று வருகை தந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார்.

'புரோட்டோ டைப்' பிரிவில் வெற்றி பெற்ற ஐடிஇ குழுவைச் சேர்ந்த ஸ்டீவன் முத்துக்குமாருடன் (வலது) அமைச்சர்.

படம்: அமைச்சர் கோ ஃபேஸ்புக்