பிரேசிலுடன் சமநிலை கண்டது செனகல்

பிரேசிலுடன் சமநிலை கண்டது செனகல்

1 mins read
3e54012a-54f2-4229-af8a-7cd70b941654
கோல் முயற்சியில் நெய்மார் (நடு). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிரேசில் காற்பந்து அணியுடன் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டுள்ளது செனகல் காற்பந்து அணி. சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் பொருதின. பிரேசில் அணிக்காக ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே கோல் போட்டார் ஃபர்மினியோ.

அதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் செனகல் ஆட்டக்காரர் மானே மீது தப்பாட்டம் காரணமாகக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் ஃபமாரா டிடியோ.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் எவ்வளவோ முயன்றும் இரு அணிகளாலும் கோல்கள் போட முடியவில்லை. ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அடுத்து பிரேசில் இன்னொரு ஆட்டத்தில் நைஜீரிய அணியுடன் ஞாயிற்றுக்கிழமை தேசிய விளையாட்டு அரங்கில் மோதுகிறது.