ஹகிபிஸ் புயலுக்கு குறைந்தது 11 பேர் பலி

ஹகிபிஸ் புயலுக்கு குறைந்தது 11 பேர் பலி

1 mins read
f11ef69b-5b3b-4af4-8c19-b25968f7e145
-

ஜப்பானின் தலைநகர் தோக்கியோவை ஹகிபிஸ் புயல் தாக்கியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 15 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சிலர் நிலச்சரிவில் மாண்டனர். வேறு சிலர் வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாகப் பெய்த மழையாலும் வீசிய காற்றாலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அத்துடன் 420,000க்கும் அதிகமான கட்டடங்கள் மின்சாரத்தை இழந்ததாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.