தடை விதிக்கப்பட்ட இடங்களில் நடமாட்ட சாதனங்களை ஓட்டிய 300க்கும் அதிகமானோருக்கு எச்சரிக்கை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் வெற்றுத்தளங்களிலும் அப்புளோக்குகளின் பொதுவான இடங்களிலும் கடந்த மாதம் தனிநபர் நடமாட்ட சாதனங்கள் மற்றும் சைக்கிள்களை ஓட்டிய 300க்கும் அதிகமானோர் பிடிபட்டனர்.

பிடிபட்ட அனைவரும் எச்சரிக்கப்பட்டனர் என்றும் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் செயல் கட்சி (மசெக) நிர்வகிக்கும் 15 நகர மன்றங்களிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

வீவக புளோக்குகளின் வெற்றுத்தளங்கள், பொதுவான இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதனங்களை ஓட்டுவதற்கான தடை செப்டம்பர் 1ஆம் தேதி நடப்புக்கு வந்ததை அடுத்து முதன்முறையாக நகர மன்றங்கள் இந்த தகவலை அளித்துள்ளன.

இந்த தடையை மீறுவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இம்மாத இறுதி வரை இரு மாதகால அவகாசம் உண்டு. தனிநபர் நடமாட்ட சாதனம் ஒன்று மோதியதில் மூன்று வயது சிறுமி காயமடைந்த சம்பவத்தையடுத்து நகர மன்றங்கள் மேற்கண்ட விவரங்களை அளித்துள்ளன. இம்மாதம் 6ஆம் தேதி பூன்லே டிரைவ் பகுதியில் உள்ள வீவக பொது நடைபாதையில் இச்சம்பவம் நடந்தது.

இந்நிலையில், மசெக நிர்வகிக்கும் 15 நகர மன்றங்களை மேற்பார்வையிடும் டாக்டர் டியோ ஹோ பின், 23,500 மின்தூக்கி நிற்கும் இடங்களில் நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட வீவக பேட்டைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் இத்தடை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

“குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருதும் விதமாக, தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க நகர மன்றங்கள் தயக்கம் காட்ட மாட்டா. அனுமதிக்கப்பட்ட இடங்களில் இச்சாதங்களையும் சைக்கிள்களையும் பொறுப்பான, பாதுகாப்பான முறையில் ஓட்ட வேண்டும்,” என டாக்டர் டியோ வலியுறுத்தினார்.

இவ்வாண்டு முதல் ஒன்பது மாதங்களில் சாலைகளிலும் விரைவுச்சாலைகளிலும் பயனாளர்கள் நடமாட்ட சாதனங்களை ஓட்டியதாக 700 சம்பவங்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து சாலைகளில் நடமாட்ட சாதனங்களை ஓட்டுவதற்கான தடை நடப்புக்கு வந்த போதிலும் இச்சம்பவங்கள் நடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!