சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர்காலத்தில் நான்கு 5ஜி கட்டமைப்புகள் வரை அமைக்கத் திட்டம்

சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர்காலத்தில் நான்கு 5ஜி கட்டமைப்புகள் வரை அமைக்கத் திட்டம்

1 mins read
968b4f8e-feb8-403d-9c09-39b6d92e2996
-

ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட இரண்டு 5ஜி கட்டமைப்புகளுக்குப் பதிலாக ஐந்து கட்டமைப்புகள் வரை உருவாக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. தேசிய பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக நம்பப்படும் திட்டங்களை வழிநடத்த அதிகாரிகள் துணிச்சலான சில நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அந்த நான்கு கட்டமைப்புகளும் வெளியீடு காண முடியும். ஆயினும், தேசிய அளவிலான 5ஜி சேவையைச் செயல்படுத்த வெகு காலமாகும். தீவு முழுவதும் செல்லக்கூடிய 5ஜி அலைகளுக்கான தட்டுப்பாட்டால் தேசிய அளவிலான சேவைக்கு இரண்டு கட்டமைப்புகள் வரையில்தான் இருக்கும்.

உடனடி தொழில்துறை தேவைகளுக்காகத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கூடுதலாக இரண்டு சிறிய 5ஜி கட்டமைப்புகளை அமைக்க நெருக்குதல் அளிக்கும். உதாரணத்திற்கு, அறிவார்ந்த துறைமுகங்களிலும் அறிவார்ந்த தொழிற்சாலைகளிலும் பாரந்தூக்கிகளைத் தூரத்திலிருந்து இயக்குவது, எந்நேரமும் கப்பல் சரக்குப் பெட்டிகளை நகர்த்துவது போன்ற செயல்கள் இந்தக் கட்டமைப்புகளின் மூலம் நிறைவு செய்யப்படலாம்.

ஜூலை மாதத்தில் நிறைவடைந்த இரண்டு மாதகால பொதுமக்கள் ஆலோசனைக்குப் பிறகு தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் முடிவு வெளிவந்தது.

சிங்கப்பூரிலுள்ள நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் ஈடுபடுத்தும் இரண்டு தேசிய கட்டமைப்புகளுக்கும் மேலும் இரண்டு வட்டார கட்டமைப்புகளுக்கும் (localised 5G networks) சிங்கப்பூர் இடமளிக்க முடியும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.