கிரிக்கெட் விளையாட்டில் சிங்கப்பூர் புத்தெழுச்சியுடன் விளையாடி, ஏறுமுகம் கண்டு வருகிறது.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. மொத்தம் 16 அணிகள் பங்குகொள்ளும் அத்தொடருக்கு பத்து அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.
எஞ்சியுள்ள ஆறு இடங்களைப் பிடிக்க 14 அணிகள் போட்டியிடுகின்றன. அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் துபாயில் நேற்று தொடங்கின.
பெர்முடா, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, பாப்புவா நியூ கினி, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் சிங்கப்பூர் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
முதல் போட்டியில் சிங்கப்பூர் நேற்று ஸ்காட்லாந்துடன் மோதியது.
முதலில் பந்தடித்த சிங்கப்பூர் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்தது.
ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மட்டுமே ஸ்காட்லாந்து அணி எடுத்திருந்ததால் சிங்கப்பூர் அணி இரண்டு ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
நாளை நடக்க உள்ள ஆட்டத்தில் பெர்முடாவுடன் சிங்கப்பூர் மோதவிருக்கிறது.


