சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் புதிய விமானச் சேவை

சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் புதிய விமானச் சேவை

1 mins read
dd9a53ce-e6d0-4de9-a104-565dbf471e81
படம்: 'கோஏர்' -

இந்தியாவின் 'கோஏர்' விமான நிறுவனம், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இரண்டு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

விமான நிலையத்தின் நான்காவது முனையத்திலிருந்து செயல்படும் 'கோஏர்', அந்த முனையத்திலிருந்து செயல்படும் முதல் இந்திய விமான நிறுவனமாக உள்ளது.

பெங்களூருக்கும் கோல்கத்தாவுக்கும் செல்லக்கூடிய இரண்டு விமானச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு சேவையின் முதல் பயணம் கடந்த சனிக்கிழமை 19ஆம் தேதியிலும் கோல்கத்தா சேவையின் முதல் பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ஆம் தேதியிலும் தொடங்கின.

இந்த இரண்டு சேவைகளும் நாள்தோறும் இயங்கும்.