இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2009ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆட்குறைப்பு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணம்.
அதே நேரத்தில் வேலையின்மை வளர்ச்சி விதிகம் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாகப் புதிய உச்சத்தை எட்டியது.
மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட ஆக அண்மை முன்னோட்டக் கணிப்புகளில் இந்த விகிதங்கள் இடம்பெறுகின்றன.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தின் 2.2 -லிருந்து செப்டம்பர் மாதத்தில் 2.3 -க்கு அதிகரித்தது
சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் 3.2 விழுக்காட்டிலிருந்து 3.3 விழுக்காட்டுக்குக் கூடியது. குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான விழுக்காடு 3.1 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.
குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான வேலையின்மை விகிதங்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக இருப்பதாக செப்டம்பர் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆட்குறைப்பு கடந்த காலாண்டில் 2,900க்குக் கூடியது. இதற்கு முந்திய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,320 ஆகவும் ஓர் ஆண்டுக்கு முன்னர் 2,860 ஆகவும் இருந்தது.

