சாங்கி விமான நிலையக் குழுமத்தின் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கான 'லோட்டே டியூட்டி ஃப்ரீ ' என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு அளித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் டிஎஃப்எஸ் குழுமம் 38 ஆண்டுகளாக மதுபான, புகையிலைப் பொருட்களைத் தீர்வை இல்லாமல் விற்ற பிறகு அங்கிருந்து வெளியேறவுள்ளது. டிஎப்எஸ்ஸுக்குப் பதிலாக லோட்டே அந்தக் கடைகளை நடத்தவுள்ளது.
லோட்டேயின் இந்தக் குத்தகை, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆறு ஆண்டுகள் நீடிக்கும். இந்தக் குத்தகைக்கான ஒப்பந்தம், சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலுள்ள 18 மதுபான, புகையிலைக் கடைகள் அனைத்தையும் உள்ளடக்கும்.
டிஎஃப்எஸ்ஸின் குத்தகை அடுத்தாண்டு ஜூன் மாதம் காலாவதியாகும்போது அவை மூடிவிடும். அதன் பிறகு லோட்டே இந்தக் கடைகளை ஏற்று நடத்தும். அந்தக் கடைகளில் பல்வேறு வகையான மதுபானம் மற்றும் புகையிலைப்பொருட்கள் கிடைக்கப்பெறும் என்று சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்தது.
குத்தகைக்கான ஆக வலுவான, கவர்ச்சியான திட்டத்தை லோட்டே முன்மொழிந்ததாக குழுமத்தின் நிர்வாக துணைத்தலைவர் (வர்த்தகம்) லிம் பெங் ஹூன் தெரிவித்தார். சந்தைச் சுழலை நன்கு அறிவதாகத் தன்னைக் காண்பித்த லோட்டே, சிறப்பான வர்த்தகத் திட்டத்தைக் கொண்டு போட்டித்தன்மைமிக்க ஏலத்தில் பங்கேற்றதாக அவர் கூறினார்.
ஏலக் குத்தகைக்கான மதிப்பாய்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைந்தது. கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் யாவும் பல்வேறு விதமான தரநிலைகளின்படி மதிப்பீடு செய்யப்பட்டன.
இதற்கு முன்னதாக 2013ல் வாசனைத் திரவியங்களுக்கும் ஒப்பனைகளுக்குமான ஏலக் குத்தகை நடத்தப்பட்டது.

