தென்கிழக்காசியாவின் ஆக உயரமான கட்டடம்

தென்கிழக்காசியாவின் ஆக உயரமான கட்டடம்

1 mins read
e68f38f8-05f1-4da3-a520-63e98c8f2a8f
-

உலகின் ஆக உயரமான கட்டடங்களுள் 19வது இடத்தில் உள்ள மலேசியாவின் 'பெட்ரோனாஸ்' இரட்டைக் கோபுரக் கட்டடங்களைக் காட்டிலும் 40 மீட்டர் உயரமாக, மொத்தம் 492 மீ. உயரத்துடன் விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த 'எக்ஸ்சேஞ்ச் 106' கட்டடம் தென்கிழக்காசியாவின் ஆக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெறுகிறது.

கோலாலம்பூரின் புதிய 'துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்' நிதி வட்டார மையத்தில் கண்ணாடி, எஃகால் எழுப்பப்பட்டுள்ள இந்த 106 தளக் கட்டடம், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வர்த்தகப் பயன்பாட்டுக்குத் தனது கதவுகளைத் திறந்துவிட இருக்கிறது. 2.6 மில்லியன் சதுர அடி பரப்பளவு இடம் வாடகைக்கு விடப்படவுள்ள நிலையில், அதில் ஐந்தில் ஒரு பங்கு இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. படம்: புளூம்பெர்க்