சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், தீபாவளி பற்றிய ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இளம் பருவத்தில் ஹிண்டு ரோட்டில் தாம் தீபாவளி அலங்காரங்களைக் கண்டதை நினைவுகூர்ந்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பூச்சரங்களின் நறுமணம், நுணுக்கங்கள் நிறைந்த கோலங்கள், பல்சுவை பலகாரங்கள், பலவண்ண விளக்குகள் அனைத்தும் அப்போது புலன்களுக்கு விருந்தளித்ததாகத் திருவாட்டி ஹலிமா கூறினார்.
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fhalimahyacob%2Fposts%2F2778941555472262&width=500" width="500" height="606" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>
தீமையை நன்மையே வெல்லும் என்ற தீபாவளியின் தாத்பரியத்தைப் பற்றி பிறகுதான் தெரிந்ததாகக் குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, தீபாவளியைக் கொண்டாடுபவர்களோ இல்லையோ, இருளை ஒளி களைவது என்ற உவமையிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் செழுமையான பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் அதனைப் புரிந்துகொள்வதற்கும், மரியாதை கொடுப்பதற்கும் ஒருவரோடு ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் முயற்சி எடுத்தால்தான் அந்தப் பன்முகத்தன்மையின்மூலம் நாம் பயன் அடைய முடியும் எனக் கூறியுள்ளார். அப்போதுதான் சமூகத்தில் பிரிவினை, வேற்றுமை, அவநம்பிக்கை என்ற இருளைக் களைய முடியும் என்று அவர் கூறினார்.
இதே லிட்டில் இந்தியா வட்டாரத்தை சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங், நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தமது தீபாவளி வாழ்த்துப் பதிவில் சுட்டிக்காட்டினார் 'இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று தமிழில் தமது பதிவைத் தொடங்கிய திரு லீ, இந்த விழாக்காலம் அனைவரது இல்லங்களிலும் இதம், ஆரோக்கியம், வளப்பம் ஆகியவற்றைச் சேர்க்கட்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நேரம் இருந்தால் லிட்டில் இந்தியாவின் வண்ண விளக்கு அலங்காரத்தைக் காணவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

