'அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவே முக்கிய ஆற்றல் மூலம்'

'அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவே முக்கிய ஆற்றல் மூலம்'

1 mins read
fc051639-49a7-40c4-954f-52dabf188974
சேண்ட்ஸ் எக்ஸ்போ மையத்தில் இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக ஆற்றல் வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஆற்றல் தேவைகளில் கூடுதல் பங்கு சூரிய சக்தியிலிருந்து பெறப்பட்டாலும் இயற்கை எரிவாயு, தொல்லுயிர் எச்ச எரிபொருள் போன்றவையே இன்னும் சிறிது காலத்துக்கு நாட்டின் முக்கியமான ஆற்றல் மூலங்களாகத் திகழும் என வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

காற்றாலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் மூலங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சிங்கப்பூரில் பெறப்படுவதாக சேண்ட்ஸ் எக்ஸ்போ மையத்தில் இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக ஆற்றல் வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் திரு சான் குறிப்பிட்டார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தி பயன்பாட்டை தற்போதிருப்பதைப்போல ஏழு மடங்கு வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

ஆயினும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவே சிங்கப்பூரின் ஆற்றல் தேவைகளுக்கான முக்கிய மூலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சிங்கப்பூரின் ஆற்றல் தேவையில் 95% இயற்கை எரிவாயு மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.