இந்தியா செல்ல 5 ஆண்டுகள் வரை விசா

இந்தியா செல்ல 5 ஆண்டுகள் வரை விசா

1 mins read
5e2760c4-5a50-42b6-afeb-76193cefefc5
இந்தியாவுக்கு மின்னியல் விசா விண்ணப்பிக்கும் இணையப்பக்கம். -

இனிமேல் இந்தியாவுக்குச் செல்லவிரும்புவோர் ஐந்து ஆண்டுகள் வரை மின்னியல் விசா பெறலாம். ஏற்கெனவே இந்தியாவுக்கு ஒரு மாத மின்னியல் விசா கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஓராண்டுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் இந்திய விசாவை சிங்கப்பூரர்கள் பெறலாம்.

இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் இ-விசாவில் சில மாற்றங்கள் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளன. கீழ்க்கண்ட இந்த மாற்றங்களை இந்தியாவின் உள்துறை அமைச்சும் சிங்கப்பூரின் இந்திய தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளன.

  1. 25 அமெரிக்க டாலர் கட்டணத்துடன் ஒரு மாத காலத்துக்கான இ-விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  2. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த குறுகிய கால ஒரு மாதத்துக்கான இ-விசா எடுப்பதற்கான கட்டணம் 10 அமெரிக்க டாலர் மட்டுமே.
  3. 80 அமெரிக்க டாலர் கட்டணத்திலான வழக்கமான இ-விசா செல்லுபடியாகக்கூடிய காலகட்டம் ஓராண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  4. ஓராண்டுக்கான இ-விசா கட்டணம் 80 அமெரிக்க டாலரிலிருந்து 40 அமெரிக்க டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது.
  5. கூடுதல் விவரங்களுக்கு https://indianvisaonline.gov. in/evisa/tvoa.html என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்போது சில பயண முகவர்கள் சிறப்புச் சலுகைக் கட்டணத்தில் மின்னியல் விசாவை பயணிகளுக்காக விண்ணப்பித்துத் தருகிறார்கள்.