சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையைப் பதிவு செய்வதற்கு ‘முக அங்கீகார வருகைப் பதிவேடு’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அரசாங்கத்தின் கொள்முதலுக்கான இணையத்தளமான ஜிபிஎஸ்ஸில் இந்தப் பணிக்கான ஏலக் குத்தகைக் கோப்புகளில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடப்பில் உள்ள கையேட்டு வருகைப் பதிவேட்டு முறைக்குப் பதிலாக மின்னியல் முறையிலான முக அங்கீகார வருகைப் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான பணிகளில் நாடாளுமன்றச் செயலகம் ஈடுபடும் என்றும் தெரிகிறது.

முக அங்கீகாரப் பதிவேட்டு முறைக்கு மாறுவதன் மூலம் திறன் மேம்படுவதுடன் மின்னிலக்க முறையைக் கொண்டிருக்கும் பணியிடமாக நாடாளுமன்றம் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.