பிரிட்டிஷ் எழுத்தாளரின் 'ஓசிஐ' தகுதி பறிப்பு

பிரிட்டிஷ் எழுத்தாளரின் 'ஓசிஐ' தகுதி பறிப்பு

1 mins read
d341babd-7bf5-4b28-9e0f-bf808110ee57
எழுத்தாளர் ஆடிஷ் டசீர். படம்: ஃபேஸ்புக் (ஆடிஷ் டாசீர்). -

பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆடிஷ் டசீரின் 'வெளிநாட்டு இந்திய குடிமகன்' (ஓசிஐ) தகுதி பறிக்கப்பட்டுள்ளது.

டைம் சஞ்சிகையில் திரு மோடியை விமர்சித்து அவர் கட்டுரை எழுதியிருந்தார். இதையடுத்து அவரது ஓசிஐ பறிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய ஆடிஷ் டசீர், தீய நோக்கத்துடன் தனது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அவரது தந்தை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை ஆடிஷ் டசீர் மறைத்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

இந்திய தாயருக்குப் பிறந்த ஆடிஷ் டசீர், பிரிட்டிஷ் குடிமகன் ஆவார். ஆனால் அமெரிக்காவில் வசித்து வருகிறார். திரு ஆடிஷ் டசீரின் தந்தை மறைந்த சல்மான் டசீர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர்.