சுடச் சுடச் செய்திகள்

காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

இந்தோனீசியாவின் லம்பொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலத்தை இந்தோனீசிய மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த முக்குளிப்பாளர், முக்குளிப்பு உடையுடனும் துணைக்கருவிகளுடனும் கண்டுபிடிக்கப்பட்டதாக  இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு அமைப்பின் பேச்சாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்திருக்கிறார்.  அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் இன்று பிற்பகலுக்குள் உறுதி செய்யப்படும் என்று திரு யூசுப் கூறினார்.

தேடல் நடவடிக்கையின் ஏழாவது நாளான கடந்த சனிக்கிழமையின்போதுகூட தேடல் முயற்சிகள் பலனளிக்காததால் அந்நடவடிக்கையை நாளை (நவம்பர் 12) வரை நீட்டிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மொத்தம் 180 மீட்புப் பணியாளர்கள், காணாமல் போன அந்த மூன்று முக்குளிப்பாளர்களைத் தேட முயன்றனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் சுமத்திரா தீவுக்கும் ஜாவா தீவுக்கும் இடையிலான தேடுதல் இடம் 1,800  கடல் மைல்களுக்கு விரிவு செய்யப்பட்டுள்ளது.