புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

புக்கிட் தீமாவிலுள்ள தடைசெய்யப்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஒரு சிறுவன், ஒரு பெண் ஆகியோரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. 

இயற்கைக்கு மாறான இந்த மரணங்களின் தொடர்பில் இன்று (நவம்பர் 14) காலை 6.42 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 

புக்கிட் தீமா லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அவ்விருவரும் இறந்துபோனதை உறுதிசெய்தனர்.

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதிக்குள் லோரோங் செசுவாய் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் சாலையின் ஒரு பகுதியும் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அடக்கம்.

சம்பவ இடத்துக்கு அருகில் ‘உள்ளே நுழைய அனுமதியில்லை’ என்று குறிப்பிடப்பட்ட போலிசாரின் தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் ‘இது அரசாங்க நிலம், அனுமதியின்றி நுழையக்கூடாது’ என்பதைக் குறிப்பிட்டு பலகை ஒன்றும் காணப்பட்டது.

அந்தப் பகுதியில் சுமார் ஆறு மணி நேரத்துக்கு போலிசார் தேடுதல் பணியில் ஈடுபட்டதாக ஷின் மின் நாளிதழ் குறிப்பிட்டது. 

 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity