ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது

நான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாடு புலம்பெயர் சமூகத்துக்குச் சிறப்பாக பங்களித்த இரு அனுபவ சாலிகளுக்கு நேற்று முன்தினம் விருது வழங்கி கௌரவித்தது.

ஒருவர் சிங்கப்பூரின் அனுபவமிக்க அரசாங்க அதிகாரி ஜே.ஒய். பிள்ளை. அவருக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட் டது.

மற்றொருவர் உலகின் ஆகப்  பெரிய அரசாங்க சார்பற்ற அமைப்பு களில் ஒன்றான ‘பிராக்’ அமைப்பை உருவாக்கிய பங்ளாதேஷ் நாட்டவ ரான ஃபசில் ஹசான் அபேட். அவ ருக்கு தெற்காசிய புலம்பெயர் சமூ கத்தின் தலைசிறந்த உறுப்பினர் விருது வழங்கப்பட்டது.

4வது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில், விருதுகளை மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வழங்கிச் சிறப்பித்தார்.

திரு ஃபசிலுக்குப் பதிலாக திரு மன்சூர் ஹசான் விருதைப் பெற்றுக் கொண்டார்.

1970ஆம் ஆண்டில் பங்ளாதேஷ் புரட்டிப்போட்ட போலா சூறாவளியால் பெரும் அவதிக்குள்ளான அந்நாட்டு மக்களின் துயர் துடைக்க திரு ஃபசில், 1972ல் பங்ளாதேஷ் கிராமப் புற மேம்பாட்டுக் குழுவை (பிராக்) அமைத்து, இயற்கைப் பேரிடராலும் 1971ல் இடம்பெற்ற பாகிஸ்தானுட னான சுதந்திரப் போராலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு பேருதவி புரிந்தார்.

இப்போது பிராக் அமைப்புக்கு, ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உள்ள 11 நாடுகளில் கிளைகள் உண்டு. அவற்றில் 100,000 பேர் வேலை செய்கிறார்கள்.

திரு ஜே.ஒய். பிள்ளைக்கு அறி முகமே தேவையில்லை. அதிபர் ஆலோசனை மன்றத்தில் அதிக காலம் சேவையாற்றிய திரு பிள்ளை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தைத் தோற்றுவித்தார். 1972 முதல் 1996 வரை அவர் எஸ்ஐஏ வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.  

நிதி, தற்காப்பு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளில் நிரந்தரச் செயலாள ராகப் பணியாற்றிய அவர், ‘ஜிஐசி’ எனும் அரசாங்க முதலீட்டு நிறுவ னம், சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக வும் பணியாற்றியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது. 
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

09 Dec 2019

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்