மூக்கில் ரத்தம் வழிந்ததால் அவசரமாக வெளியேறிய மலேசிய பிரதமர்

எம்பிஓபி அனைத்துலக பனை  எண்ணெய் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோது, கைக்குட்டையால்  தமது மூக்கைப் பலமுறை துடைத்துக்கொண்டிருந்தார் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது.

செய்தியாளர்களுடனான சந்திப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரு மகாதீரின் மெய்க்காப்பாளர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

94 வயதான திரு மகாதீரின் மூக்கில் ரத்தம் வழிந்ததாகவும், ஆனால் சற்று நேரத்தில் அது நின்றுவிட்டதாகவும் அவரது அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டார்.

“அவர் நலமாக இருக்கிறார். தற்போது புத்ராஜெயாவிலிருக்கும் தமது அலுவலகத்தில் அவர் பணியில் இருக்கிறார்,” என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity