தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை

முழு நேர தேசிய சேவையாளரின் மரணத்துக்கு இட்டுச் சென்ற செயலில் அவரது பங்குக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் வாரண்ட் அதிகாரியான  36 வயது முகம்மது ஃபாரிட் முகம்மது சாலேவுக்கு நேற்று  13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி நிகழ்ந்த 22 வயது கார்ப்பரல் கோக் யுயென் சின், நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் தண்டனை பெற்ற மூன்றாவது அதிகாரியாவார்.

ஃபாரிட் மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று, தீயணைப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பெரும்பாலான அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில், கார்ப்பரல் கோக்கின் தேசிய சேவை நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடக் கூடினர்.

பின்னர் சில அதிகாரிகள் கார்ப்பரல் கோக்கைத் தூக்கிக்கொண்டு கிணற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்.

விசாரணையின்போது, ​​கார்ப்பரல் கோக்கைக் கிணற்றில் தள்ளுமாறு ஃபாரிட் சொன்னதாக நூர் ஃபட்வா சாட்சியம் அளித்தார்.

நூர் ஃபட்வாவின் நடவடிக்கைகளின் விளைவாக, கார்ப்பரல் கோக் நீரில் மூழ்கினார்.

மரணம் விளைக்கும் குற்றச்செயலுக்கு உட்படாத, கண்மூடித்தனமான செயலைச் செய்ததற்காக நூர் ஃபட்வாவுக்கு 2018 அக்டோபரில் ஒரு வருடம் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அவர் தனது சிறைத் தண்டனையை நிறைவு செய்துள்ளார்.

தனது கைபேசியில் பதிவான அச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகளை நீக்கியதற்காக 2018 டிசம்பரில், 33 வயது ஸ்டாஃப் சார்ஜென்ட் அடிகாசலி சுஹைமிக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று இரவு நிலையத்திற்கு பொறுப்பான மற்ற இரண்டு அதிகாரிகள்   38 வயது லெப்டினன்ட் கென்னத் சோங் சீ பூன், முதல் மூத்த வாரண்ட் அதிகாரியான 40 வயது நஜன் முகமது நாஜி ஆகியோர் விசாரணை கோரியுள்ளனர். அவர்களின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

இப்பகுதியில் மேலும் செய்திகள்
நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது. 
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

நியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.
படம்: டுவிட்டர்/மைக்கல் ஷேட்

09 Dec 2019

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்