இதர வட்டாரங்களின் ஒத்துழைப்பு அவசியம்

மெக்சிகோவில் பிரதமர் லீ உரை: தனித்து இயங்கினால் பல வாய்ப்புகளை ஆசியா இழக்கும்

ஆசியா அதன் வளப்பத்திற்காக இதர வட்டாரங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக மெக்சிகோ சென்றிருக்கும் அவர் சிங்கப்பூரையும் மெக்சிகோவையும் சேர்ந்த சுமார் 250 வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றினார்.

“இது ஆசிய வட்டாரம். எங்களுக்குள் நாங்களே வர்த்தகம் புரிந்துகொள்கிறோம் என்று கூறி ஆசியா தனது கதவுகளை அடைத்துக்கொண்டால் வறுமையில் வாடிவிடாது. இருப்பினும் பல்வேறு வாய்ப்புகளை அது இழந்துவிடும்,” என்றார் திரு லீ.

சிங்கப்பூர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமான உத்திபூர்வ நடுவமாக உருமாறி உலகின் பொருளியலை திசை திருப்பியது தொடர்பான கருத்துகளுக்கு அவர் பதிலளிக்கையில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க நூற்றாண்டாகப் பார்க்கப்பட்டது. 

21ஆம் நூற்றாண்டு ஆசிய ஆக்கிரமிப்பாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளதால் ஆசிய நூற்றாண்டாக அது இருக்கும்.

சீனாவும் இந்தியாவும் வலிமைபெற்று மைய ஈர்ப்பு தொடர்ந்து ஆசியா பக்கம் சாயும்போது உலகின் மையமாக ஆசியாவைப் பார்க்க இயலாது என்றும் அந்த வட்டாரம் வெளியிலிருந்து சந்தைகளையும் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பங்களையும்  நாடவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அதன் மூலம்தான் அது வளப்பம் பெற முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“தன்னைப்பேணித்தனம் மிகுந்தி ருப்பதாக அண்மையில் சொல்லப் பட்டாலும் சில நாடுகள் ஒன்றோ டொன்று ஒத்துழைக்கவே விரும்பு கின்றன. 

“இருதரப்பாக மட்டுமின்றி பெரிய குழுக்களாக இணைந்து செயல்படவும் அவை விரும்புகின்றன. 

“காரணம் ஒத்துழைப்பின் மூலமே வெற்றி காண இயலும் என்பதை அவை தெரிந்து வைத்துள்ளன,” என்று திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார்.