தெம்பனிஸ் அவென்யூ 3ல் இன்று (நவம்பர் 21) காலை 8.15 மணியளவில் மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஒன்று மோதியதில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
காரின் ஓட்டுநரான 47 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில், கறுப்பு நிற மெர்சிடீஸ் காரின் முன்பாக உடைந்துபோன குடையும் பல தாள்களும் காணப்பட்டன. அந்த காருக்கு அருகில் ரத்தக் கறையும் படிந்திருந்தது.
காரின் முன்புற வலது சக்கரத்திலும் அதற்கு அருகிலும் ரத்தம் காணப்பட்டது.
எதிர்ப்புற சாலையோரத்தில் வளைந்து, நெளிந்த சைக்கிள் ஒன்று காணப்பட்டது.
காலை உணவை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வழியில் சைக்கிளோட்டி விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன நாளிதழான ஷின் மின் குறிப்பிட்டது.
இந்த சம்பவம் குறித்து காலை 6.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
காரில் அடிபட்ட சைக்கிளோட்டியான 64 வயது ஆடவர் சுயநினைவில்லாத நிலையில் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆனால், விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தொடர்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity