எய்ட்ஸை துடைத்தொழிக்கக் கிளம்பிய எழுச்சிமிகு சமூகம்

எய்ட்ஸ் நோயையும் எச்ஐவி கிருமித் தொற்றையும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் இருந்து ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட சமூக செயல் திட்டம் இன்று (நவம்பர் 23) தொடங்கிவைக்கப்பட்டது. இதற்காக 30 அமைப்புகளும் குழுக்களும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன.

எச்ஐவி தொற்றை சிங்கப்பூரில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கான தேசிய உத்தி ஒன்றை வகுக்கும் முயற்சிகள் இத்திட்டத்தின் மூலம் தொடங்கும் என்று இந்த அமைப்புகள் நம்பிக்கை கொண்டுள்ளன.

சிங்கப்பூரில் எச்ஐவி கிருமித் தொற்றி, பரவும் அபாயத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் உள்ளனர். ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் ஆண்களும் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடுவோரும் இவர்களில் பெரும்பான்மையினராக உள்ளதாக செயல் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளை இத்திட்டம் மேற்கோள் காட்டுகிறது.

“சிறியதாக இருப்பினும் கல்விகற்ற மக்களைக் கொண்டது சிங்கப்பூர். உலகத்தரத்திலான சுகாதாரப் பராமரிப்பு முறையும் எச்ஐவியைத் தடுத்து நிறுத்த அதிக நிதி ஆதரவு கொண்ட திட்டமும் இங்கு நடப்பில் உள்ளன.

“எனவே 2030ஆம் ஆண்டுக்குள் எச்ஐவியை துடைத்தொழிக்கப் புறப்பட்டிருக்கும் நாடுகளோடு சிங்கப்பூர் இணையும் நிலையில் உள்ளது,” என ‘ஆக்‌ஷன் ஃபார் எய்ட்ஸ்’ என்னும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் ராய் சான் செயல் திட்ட தொடக்க நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

எச்ஐவி கிருமியைத் தடுப்பதற்குரிய பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்டவை செயல்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன.

கடந்த ஈராண்டுகளாகச் செயல்பட்டு இந்த சமூகத் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் குழுக்களில் ‘ஆக்‌ஷன் ஃபார் எய்ட்ஸ்’ அமைப்பும் ஒன்று.

பொது சுகாதாரத்திற்கான சா சுவீ ஹாக் பள்ளி, பரவும் நோய்த் தடுப்புக்கான தேசிய நிலையம் போன்றவையும் அந்தக் குழுக்களில் அடங்கும்.

இதேபோன்ற செயல்திட்டம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ளது. ஆஸ்திரேலிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு கடந்த 2017ஆம் ஆண்டு செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது. 2020ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் எச்ஐவியை ஒழிப்பது திட்டத்தின் நோக்கம்.

புதிய எச்ஐவி தொற்றுகளையும் எய்ட்ஸ் தொடர்பான மரணங்களையும் குறைக்கும் நோக்கத்தில் விரைந்து செயல்படும் நகரங்களின் பட்டியலில் 70 நகரங்கள் உள்ளன. அவை அத்தனையும் பாரிஸ் உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ளன.

கடந்த ஆண்டு இறுதிவாக்கில் 8,295 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடம் எச்ஐவி தொற்று இருந்தது. அவர்களில் 2,034 பேர் உயிரிழந்துவிட்டனர்.

2007 முதல் 2017 வரை ஆண்டு தோறும் 400 முதல் 500 வரையிலான புதிய எச்ஐவி தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!