சுடச் சுடச் செய்திகள்

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

பயன்படுத்தப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள், கழிவு விலையில் பள்ளிப்படிப்புக்குத் தேவையான உபகரணங்கள், பற்றுச்சீட்டுகள், மளிகைப் பொருட்கள் என பல வழி களில் வசதி குறைந்த குடும்பங்கள் இன்று தெம்பனிஸ் ஹப் மையத்தில் உதவிகள் பெற்றன.

இன்று நடந்த வருடாந்திர ஃபேர்பிரைஸ் பாடப் புத்தகப் பகிர்வுத் திட்டத்தில் பங்கேற்க 25,000 வசதி குறைந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

இவ்வாண்டு திட்டத்துக்கு சுமார் 550,000 புத்தகங்கள் நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றன. இத்திட்டத்தின் 37 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஆண்டில்தான் ஆக அதிகமான புத்தகங்கள் நன் கொடையாகக் கிடைத்தன.

இலவச பாடப் புத்தகங்கள் தவிர்த்து, பெரும்பாலும் என்டியுசி உறுப்பினர்களைக் கொண்ட என்டியுசி-யு-கேர் நிதியின் 30,000 பயனாளர்கள் என்டியுசி பள்ளிக்குத் திரும்புதல் திட்டத்தின் கீழ் கழிவு விலைகளில் பள்ளிப்படிப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். 

இத்திட்டம் நாளையும் இடம்பெறும். 

“சமூகத்திடமிருந்து கிடைத்து வரும் தொடர் ஆதரவால் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம். அந்த ஆதரவின் மூலம் இந்த ஆண்டு 550,000 பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளன.

“சமூகத்தின் தாராள குணமும் இத்திட்டத்துக்கு அரும்பாடுபட்ட தொண்டூழியர்களும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. என்டியுசியின் யு-கேர் பள்ளித் திரும்புதல் திட்டத்துடன் சேர்ந்து நமது சமூகத்தின் வசதி குறைந்த வர்களைத் திரட்டி, அவர்கள் பிள்ளைகளின் பள்ளிச் செலவுகளைக் குறைக்க உதவ முடிந்துள்ளது,” என்றார் ஃபேர்பிரைஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு சியா கியான் பெங் தெரிவித்தார்.

தெம்பனிஸ் ஹப் மையத்தின் மற்றொரு பகுதியில், வசதி குறைந்த 300 குடும்பங்கள் $240 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை யும் உணவுப் பற்றுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டன.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், நியூ கிரியேஷன் தேவாலயம் ஆகியவை இணைந்து இந்த உதவியை அளிக்கின்றன.

சமூகப் பங்காளிகளும் இந்த ஒத்துழைப்புக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

என்யுடிசிஃ பேர்பிரைஸ் அறநிறுவனம் $30 மதிப்பிலான விழாக் காலப் பையில் ‘காயா’, ‘ஓட்மீல்’ போன்ற உணவுப் பொருட்களைக் கொடுத்தது.

“இந்த விழாக்காலத்தில், தங்கள் தோள்களில் உள்ள சுமை சற்று குறைக்கப்படுவதை சில குடும்பங்கள் நன்றியுடன் வரவேற்கும். 

“புதிய பள்ளி ஆண்டில் தங்கள் பிள்ளைகளுக்கு போதிய பாட உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்வதில் பெற்றோர்கள் மூழ்கி இருப்பார்கள். நமது பங்காளிகள் அளித்த தாராள உதவிகளுக்கு நன்றி.

“ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் தொடர்பில் இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் நமது சமூகத்துக்கு உதவ முன் வர வேண்டும்  என்று ஊக்குவிக்கி றோம்,” என்றார் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் திரு டெஸ்மண்ட் சூ.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon