கட்டுமானத்துறை வேலையிடத்தில் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பது குறித்து மனிதவள அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் கட்டுமானத் துறை பணியிடங்களில் 14 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். சென்ற ஆண்டிலும் கட்டுமானத்துறை விபத்து மரணங்கள் இதே எண்ணிக்கையில் இருந்தன.
சிறிய அளவிலான கட்டுமானத் தளங்களில் பணிபுரியும்போது ஊழியர்கள் இறக்கும் போக்கும் கவலை அளிப்பதாக அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
கடந்த ஆண்டு இறந்த 14 ஊழியர்கள்களில், மூவர் 10 மில்லியனுக்கும் குறைவான ஒப்பந்தத் திட்டங்களில் பணிபுரிந்தனர். இத்தகைய சிறிய திட்டங்களில் இந்த ஆண்டு ஐந்து இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
அண்மையில் நவம்பர் 22 அன்று நடந்த விபத்தில் உலோகத் தடுப்புகளுக்கும் பாரந்தூக்கிக்கும் இடையில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு இதுவரை நிகழ்ந்துள்ள 14 இறப்புகளில், நான்கு நவம்பர் மாதத்தில் நிகழ்ந்துள்ளன.
இந்த 2019ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான கட்டுமானத் துறை ஊழியர்கள் மரணமடைந்த மாதமாக இது அமைந்துள்ளது என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் மனிதவள அமைச்சு அமலாக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. பிப்ரவரி நடுப்பகுதிக்கு முன்னர் 400 இடங்களில் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity