கொண்டாட்ட உணர்வில் வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும்

கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை காலங்களில் பல இனங்கள் ஒன்று கூடி கொண்டாட்ட உணர்வில் திளைத்திருப்பது இப்போது வழக்க மாகிவிட்டது.

அதில் சிங்கப்பூரர்கள் மட்டுமல்லாது தங்கள் குடும்பங்களை விட்டு இங்கு வேலைக்கு வந்தி ருக்கும் வெளிநாட்டு ஊழியர் களையும் இல்லப் பணிப்பெண் களையும் கொண்டாட்ட நிகழ்வில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் அந்தக் கூதூகலத்தை ஏற்படுத்த இரு அமைப்புகள் ஒன்று சேர்ந்தன.

சிங்கப்பூர் பைபிள் சங்கத்தின் நன்கொடை நிறுவனமான ‘சோகேர்’ அமைப்பும் ‘டிஎஸ்எல் ஹோல்டிங்ஸ்’ குழுமமும் இணைந்து இவ்வாண் டின் தங்கள் கிறிஸ்மஸ் கொண் டாட்ட நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களையும் இல்லப் பணிப் பெண்களையும் சேர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தன.

அந்த வகையில் இம்மாதம் 8ஆம் தேதியன்று டிஎஸ்எல் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலை மையகத்தில் 350 வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப் பெண்களும் ‘கிறிஸ்மஸ் வித் த நேஷன்ஸ்’ அதாவது ‘தேசங்களு டன் கிறிஸ்மஸ்’ எனும் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கிறிஸ்மஸ் பாடல்கள் பாடப்பட்ட துடன் வெளிநாட்டு ஊழியர் களுக்கு பரிசுகளும் வழங்கப்பட் டன.

டிஎஸ்எல் ஹோல்டிங்ஸ் குழுமத் தின் தலைவர் திரு டான் சுவீ லிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமது தொடக்க உரை யில் ஊழியர்களைக் கௌரவித் தார்.

“இந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சி யில் வெளிநாட்டு ஊழியர்களைக் கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். எங்கள் குழும நிறுவனங் களுக்கு மட்டுமல்லாது சிங்கப்பூ ரின் வெற்றிக்கு நீங்கள் பங்களிப் பதற்கு நன்றி தெரிவித்துக்கொள் கிறேன்,” என்றார் திரு டான்.

சிங்கப்பூர் சமூகத்துக்கு வெளி நாட்டு இல்லப் பணிப்பெண்களின் பங்களிப்பு பற்றி கருத்துரைத்த ‘சோகேர்’ அமைப்பின் தலைமை நிர்வாகி திரு எசேக்கியல் டான், “வெளிநாட்டு ஊழியர்கள் பொது தொழில்துறைகளில் பணியாற்றும் அதேவேளையில் இல்லப் பணிப் பெண்கள் வீட்டில் சிறப்பாகப் பணி யாற்றி முதலாளிகளின் இதயத்தில் இடம்பிடித்து விடுகின்றனர்.

“அவர்கள் நாள்தோறும் செய்யும் தியாகங்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை எட்டுதல் திட்டத்தின் தொடர்பில்தான் ‘தேசங்களுடன் கிறிஸ்மஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொண்டாட்ட நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்களையும் இணைத்துக்கொள்ளும் திட்டம் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!